முதலமைச்சரின் மனதிற்கு விரும்பாத நிகழ்வு- மா.சு வேதனை

தமிழக அரசு விரும்பாத, முதலமைச்சருக்கு மனதிற்கு ஒப்புதல் இல்லாத நீட் தேர்வு நாளை நடைபெறுகிறது. இதற்கு எதிரான தீர்மானம் சட்டமன்ற கூட்டத்தொடரின் இறுதி நாளான 13ம் தேதி முதலமைச்சர் கொண்டு வருவார் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னையை அடுத்த பெரும்பாக்கம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்ட பிறகு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், சட்டமன்ற கூட்ட தொடரில் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அரவிந்த ரமேஷ் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை மேம்படுத்த வேண்டும் என்றார். 5ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள இம்மருத்துவமனைக்கு சுற்றுச்சுவர் , சிமெண்ட் தரை, கீழ் நிலை நீர் தேக்க தொட்டி, பெண் செவிலியர்கள் பணியமர்த்தல், பெண் செவிலியர் தங்குமிடம், மகப்பேறு படுக்கை அறை வேண்டும் என்ற வேண்டுகோள் உள்ளது இதனை முதல்வர் கவனத்திற்கு கொண்டு சென்று இவ்வாண்டிலேயே பெண் செவிலியர் பணி, குடியிருப்பு, சுற்றுசுவர்,போன்ற பல்வேறு வசதிகள் செய்யப்பட்ட உள்ளது. இதற்காக மாவட்ட ஆட்சியர் திட்ட மதிப்பீடு செய்வார் எனவும், மிகவிரைவில் இம்மருத்துவமனை மேம்படுத்துவதற்காக கட்டமைப்புகள் செய்யப்பட்ட உள்ளது என தெரிவித்தார்.

சென்னையிலுள்ள மக்களை இங்கு குடியமர்த்த செய்ய காட்டிய அக்கரையை அவர்களுக்குக்கான வசதியைச்செய்யவேண்டும் என யோசிக்காமல் 10ஆண்டுகள் கடந்த ஆட்சியாளர்கள் இருந்துள்ளனர் என குற்றம்சாட்டினார். மேலும், இந்திய வரலாற்றில் தடுப்பூசி சாதனை முகாமாக நாளை 20லட்சம் தடுப்பூசிகள் போடப்படவுள்ளது. நாளை தடுப்பூசி செலுத்தியவர்கள் எண்ணிக்கை 4 கோடி என்ற அளவினை எட்டும் என எதிர்பாக்கப்படுகிறது. 97.5%நோய் எதிர்ப்பு உடலில் உருவாகி உயிரிழப்பு தடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில், தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத், சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் அரவிந்தரமேஷ், பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம் ஆகியோர் பங்கேற்றனர்.

Translate »
error: Content is protected !!