தென் சீனக் கடலில் அமெரிக்க போர் விமானம் தரையிறங்கும் போது விபத்து.. 7 பேர் காயம்

தென் சீனக் கடலில் யூஎஸ்எஸ் கர்ல் வென்சன் போர் கப்பல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறது. அந்த போர்க்கப்பலில் இருந்து போர் விமானங்கள் நேற்று வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.

அப்போது பயிற்சி முடிந்து  எஃப் 35சி ரக போர் விமானம் ஒன்று போர் கப்பலில் தரையிறக்க முயன்றபோது எதிர்பாராதவிதமாக விமானம் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் போர்க்கப்பலில் இருந்த 7 வீரர்கள் காயமடைந்தனர். போர் விமானி அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினார். காயமடைந்த 7 வீரர்களும் சிகிச்சை பெற்று வருகின்றனர். போர் விமானம் தரையிறங்கும் போது விபத்துக்குள்ளான சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Translate »
error: Content is protected !!