இந்தியாவில் தடுப்பூசி போடும் பணி வேகம் அதிகரித்து வருகிறது – மத்திய சுகாதாரத்துறை செயலாளர்

இந்தியாவில் தடுப்பூசி போடும் பணி வேகம் அதிகரித்து வருகிறது. ஒரு நாள் சராசரி டோஸ் மே மாதத்தில் 20 லட்சத்திலிருந்து செப்டம்பரில் 78 லட்சமாக அதிகரித்துள்ளது. இந்த எண்ணிக்கை இன்னும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறியது, மே 30லிருந்து செப்டம்பர் முதல் 7 வரை அதிக தடுப்பூசிகளை வழங்கியுள்ளோம்.
கடந்த 24 மணி நேரத்தில் 86 லட்சம் டோஸ் வழங்கப்பட்டது. பண்டிகைகளுக்கு முன் தடுப்பூசியின் வேகத்தை அதிகரிக்க வேண்டும். பாதிக்கப்படக்கூடிய மக்களுக்கு தடுப்பூசி போடுவதற்கு மாநிலங்களும் மையமும் செயல்பட வேண்டும் என்றார்.

Translate »
error: Content is protected !!