லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலரை  லஞ்ச ஒழிப்புத்துறையினர் கைது

தேனியில், பட்டா மாறுதல் செய்வதற்காக 50 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் மற்றும் அவரது நண்பரையும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் கைது செய்துனர்.

பெரியகுளம் அருகே உள்ள குள்ளப்புரம் கிராமத்தில் VAO-வாக இருப்பவர் விஜயன். இவர் ஈஸ்வரன் என்பவரிடம் பட்டா பெயர் மாற்றம் மற்றும் பட்டாவில் பெயர் நீக்கம் செய்வதற்காக ஐம்பதாயிரம் ரூபாய் கேட்டுள்ளார்.

இதுகுறித்த தகவலின் பேரில் அங்கு விரைந்த லஞ்ச ஒழிப்புத்துறையினர் பணத்தை வாங்கிய போது கிராம நிர்வாக அலுவரையும், அவருக்கு உறுதுணையாக இருந்த நபரையும் கையும், களவுமாக பிடித்தனர். இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்

 

Translate »
error: Content is protected !!