திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள நீர்நிலைகளில் இருந்து திறந்துவிடப்பட்ட உபரிநீரில் கழிவுநீர் கலந்து வருவதால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
பழனியில் கனமழை காரணமாக தொடர்ந்து நீர்நிலைகளில் தண்ணீர் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக முக்கிய அணைகளில் இருந்து உபரிநீர் திறந்துவிடப்பட்டுள்ளது. வையாபுரி குளத்தில் இருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீரில் கழிவுநீர் கலந்து நுரை பொங்கி காணப்படுகிறது. இதனால் வாய்க்கால்களில் துர்நாற்றம் வீசுவதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
மேலும், தொடர்ந்து நுரை பொங்கிய நீர் வருவதால் நோய் தொற்று அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் விவசாயிகள் தெரிவித்தனர்.