மேற்கு வங்கம்: பாஜக எம்பி அர்ஜுன் சிங் வீட்டில் வெடிகுண்டு வீச்சு

பா.ஜ.க. எம்.பி அர்ஜுன் சிங்கின் கொல்கத்தாவிலிருந்து 100 கிமீ தொலைவில் உள்ள ஜக்தாலில் வசித்து வருகிறார். இந்நிலையில் இன்று காலை மர்ம நபர்கள் அர்ஜுன் சிங் வீட்டின் அருகே 3 குண்டுகளை வீசிவிட்டு தப்பி சென்றனர். இந்த வெடிகுண்டு வீச்சில் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது பற்றி கூறிய மாநில கவர்னர் ஜக்தீப் தங்கார்,

மேற்கு வங்கத்தில் வேண்டுமென்றே நடக்கும் வன்முறை சம்பவங்கள் குறைவதற்கான அறிகுறி எதுவும் இல்லை என்று கூறினார். மேலும் எம்.பி அர்ஜுன் சிங்கின் வீட்டருகே குண்டு வீசப்பட்ட சம்பவம் சட்டம் ஒழுங்கு குறித்த கவலையை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக போலீசார் விரைவாக நடவடிக்கை எடுப்பார்கள் என்று எதிர்பாக்கிறேன் என கூறியுள்ளார்.

Translate »
error: Content is protected !!