ஆவின் நிறுவனம் புதிதாக 3 மாதம் வரை வைத்து பயன்படுத்தும் விதமாக ஆவின் ‘டிலைட்’ எனும் பசும்பாலை அறிமுகம் செய்துள்ளது. பொதுமக்கள் வேண்டுகோளுக்கு இணங்க புதிய வடிவத்தில் 500 மிலி பாக்கெட்டுகளில் தயார் செய்யப்படுகிறது. குளிர்சாதனப் பெட்டி வசதியின்றி 90 நாட்கள் வரை வைத்து பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 500 மிலி பாக்கெட்டின் விலை ரூ.30க்கு விற்பனை செய்யப்படுகிறது.