கும்பகோணம் அருகே வயலில் வேலை பார்த்துக் கொண்டிருந்த பெண் மீது இடி விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
புதிதாக உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக தஞ்சை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் துக்காச்சி ஏரி சத்திரம் பகுதியில் வயலில் வேலை பார்த்துக்கொண்டிருந்த சுப்பிரமணியன் மனைவி ராதிகா மீது இடி விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து நாச்சியார் கோவில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ராதிகாவின் உடலை கைப்பற்றி கும்பகோணம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.