திருவண்ணாமலை மாவட்டத்தில் பெண் சடலம் மீட்பு

திருவண்ணாமலை மாவட்டம், பாலானந்தல் அருகே இறந்த நிலையில் பெண் சடலம் மீட்கப்பட்ட நிலையில் அவர் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாரா என போலீசார் விசாரித்து வருகின்றனர். மாயாகுளம் பகுதியை சேர்ந்த பூபாலன் மனைவி ஜெயந்தி, பாலானந்தல் கிராமத்தில் சடலமாக கிடந்தார். புகாரின் பேரில் காவல்துறை நேரில் வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். அப்போது கீழ்பாலானந்தல் பகுதியை சேர்ந்த பாலகிருஷ்ணன் நிலத்தில் எலிக்காக வைக்கப்பட்டிருந்த மின் வேலியில் ஜெயந்தி சிக்கி இறந்திருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Translate »
error: Content is protected !!