உலக அளவில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 56.67 லட்சம்

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 37.01 கோடியை கடந்துள்ளதாகவும், கொரோனா வைரஸ் தொற்றுக்கு 56.67 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். சீனாவின், வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது.

இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 37.01 கோடியைக் கடந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 29.92 கோடிக்கும்  மேற்பட்டோர்  குணமடைந்துள்ளதாகவும், வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 56.67 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும்,  வைரஸ் பரவியவர்களில் 7.14 கோடிக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருவதாகவும், மேலும் 95 ஆயிரம் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Translate »
error: Content is protected !!