யுவராஜ் சிங்-ஹேசல் கீச் தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்தது

முன்னாள் கிரிக்கெட் வீரர், யுவராஜ் சிங்கிற்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. கிரிக்கெட் ரசிகர்களால் ‘யுவி த பிரின்ஸ்’ என்று செல்லமாக அழைக்கப்பட்டவர் யுவராஜ் சிங்.

இவர் கேன்சர் பாதிப்புக்கு ஆளாகி இருந்த நிலையில், அதிலிருந்து மீண்டு, கடந்த 2016ம் ஆண்டு நடிகை  ஹேசல் கீச்சை திருமணம் செய்து கொண்டார். இந்தநிலையில் இந்த தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதனை சமூக வலைதள பக்கத்தில் உறுதி செய்திருந்த அவர், கடவுள் தங்களுக்கு ஆண் குழந்தை கொடுத்து ஆசிர்வதித்திருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இந்த நற்செய்தியை ரசிகர்கள், குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைவதாகவும் அதில் தெரிவித்துள்ளார்.

Translate »
error: Content is protected !!