அண்ணா பல்கலைக்கழக ஆன்லைன் தேர்வுகள் ஜூன் 14 முதல் தொடங்கும் – உயர் கல்வித்துறை அறிவிப்பு

அண்ணா பல்கலைக்கழக இளநிலை, முதுநிலை பட்டப்படிப்புகளுக்கான ஆன்லைன் தேர்வுகள் ஜூன் 14 முதல் தொடங்கும். என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார்.

உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அனைத்து பல்கலைக்கழக துணைவேந்தர்களுடன், பல்கலைக்கழக செயல்பாடுகள் குறித்து காணொலி மூலம் நேற்று தலைமைச் செயலகத்தில் கலந்துரையாடினார், முதன்மைச் செயலர் மற்றும் உயர்கல்வித் துறை செயலாளர் அபூர்வா ஆகியோர் இதில் கலந்து கொண்டனர்.

அது தொடர்பாக உயர்க்கல்வித்துறை வெளியிட்டுள்ள தேர்வுகள்  விவரம்:

* ஏற்கனவே தேர்வு எழுதி தேர்வான / தேர்வாகாத மாணவர்கள், புதியதாக நடைபெறவிருக்கின்ற அண்ணா பல்கலைக்கழகத் தேர்வுக்கு தேர்வு கட்டணம் செலுத்த வேண்டிய அவசியம் இல்லை.

* 2017 நெறிமுறையின்படி (Regulation) பட்டப்படிப்பு மற்றும் பட்டமேற்படிப்பிற்கான தேர்வுகள் 14.06.2021 ல் துவங்கும்.

மற்ற பல்கலைக்கழகங்களைப் போலவே, ஆன்லைன் மூலம் தேர்வுகள் 3 மணிநேரம் நடைபெறும்.

* 14.06.2021 ல் துவங்கி 14.07.2021க்குள் தேர்வுகள் முடிவடையும்.

* 2013 – 2017 நெறிமுறையின்படி (Regulation) பட்டப்படிப்பிற்கான தேர்வுகள் 14.06.2021ல் தொடங்கப்படும்பட்டமேற்படிப்பிற்கான தேர்வுகள் 14.07.2021ல் தொடங்கி ஒரு மாத காலம் நடைபெறும்.

*  2013க்கு முன் நெறிமுறையின்படி (Regulation) பட்டப்படிப்பு மற்றும் பட்டமேற்படிப்பிற்கான தேர்வுகள் 21.06.2021 ல் தொடங்கி 30.07.2021ல் முடிவுறும்.

* One word Question Exam – பணம் கட்டாமல் / தேர்வு எழுதாமல் உள்ள மாணவர்கள் தற்பொழுது தேர்வு கட்டணம் செலுத்தி தேர்வு எழுத விண்ணப்பிக்கலாம்.   மாணவர்கள் தேர்வு எழுதுவதற்காக 24.05.2021 முதல் விண்ணப்பிக்க தொடங்கி 03.06.2021 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

* மற்ற பல்கலைக்கழகங்களைப் பொறுத்தவரையில் ஒன்றிரண்டு பல்கலைக்கழகங்களைத் தவிர்த்து மற்ற பல்கலைக்கழக மாணவர்களுக்கு 25.05.2021 முதல் தேர்வுகள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது தற்பொழுது தேர்வுகள் ஒத்திவைக்கப்படுகிறதுஊரடங்கு காலத்தில் ஆன்லைன் மூலம் தேர்வெழுதுவது கிராமப்புற மாணவர்களுக்கு கடினமாக உள்ள சூழ்நிலையால் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுகிறது.

* அண்ணா பல்கலைக்கழகம் தவிர்த்த மற்ற அனைத்து பல்கலைக்கழகங்களுக்கான பட்டத்தேர்வுகள்அரியர் மற்றும் இறுதித் தேர்வுகள் 15.06.2021 தொடங்கி 15.07.2021க்குள் முடிவடையும். இதற்கான தேர்வு முடிவுகள் 30.07.2021க்குள் வெளியிடப்படும்.

இவ்வாறு, உயர்க்கல்வித்துறை தேர்வுகள் குறித்து செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Translate »
error: Content is protected !!