அமெரிக்காவில் இருந்து வைரமுத்துக்கு போன் போட்ட ரஜினி.. நலமாக இருப்பதாக தகவல்

உடல்நிலையில் பரிசோதனை காரணமாக கடந்த 19-ந்தேதி தனி விமானம் மூலம் அமெரிக்கா சென்றார்  ரஜினிகாந்த்.

அவர் அங்குள்ள மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைகளை மேற்கொண்டார். மருத்துவ குழுவினர் ரஜினிக்கு பல்வேறு உடல் பரிசோதனைகள் செய்தனர். இந்நிலையில் நான் நலமாக இருப்பதாக ரஜினிகாந்த் தொலைபேசி மூலம் கவிஞர் வைரமுத்துக்கு தகவல் கூறியுள்ளார்.

இது குறித்து கவிஞர் வைரமுத்து ட்விட்டரில் பதிவிட்டது,

அமெரிக்காவில் இருந்து ரஜினி அழைத்தார். மருத்துவ சோதனை நல்ல வண்ணம் நடந்தது என்றார். மகிழ்ந்தேன். அவர் குரலில் ஆரோக்கியம். நம்பிக்கை இரண்டும் இழையோட கண்டேன். அவரன்பர்களின் மகிழ்ச்சிக்காகவே இதை பதிவிட்டு பகிர்கிறேன்என பதிவிட்டுள்ளார்.ரஜினிகாந்த் 2 வாரங்களுக்குப் பிறகு அமெரிக்காவிலிருந்து சென்னை திரும்புகிறார்.

Translate »
error: Content is protected !!