அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியாகும்  ‘மாஸ்டர்’…..ரிலீஸ் தேதி இதோ

சென்னை,

விஜய் நடித்த ‘மாஸ்டர்’ சினிமா நாளை மறுநாள் (29ந் தேதி) அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியாகிறது.

பிகில் படத்துக்குப் பிறகு மாநகரம் பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தில் விஜய் நடித்துள்ளார். இசைஅனிருத். விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு, ஆண்ட்ரியா, அர்ஜுன் தாஸ் ஆகியோர் நடித்துள்னர்.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, திரையரங்குகள் 8 மாதங்களாக திறக்கப்படவில்லை. இதனால் ‘மாஸ்டர்’ படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் திரையரங்குகளில் பொங்கல் விருந்தாக வெளியானது

இந்நிலையில் ‘மாஸ்டர்’ படம் வெள்ளியன்று (29ந் தேதி) அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியாகவுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. கடந்த 13-ம் தேதி திரையரங்குகளில் திரையிடப்பட்ட இப்படம், தியேட்டரில் ரிலீசான 16 நாட்களில் ஓடிடியில் வருவது ரசிகர்களையும், பட உலகத்தினரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளது. இந்தியா மற்றும் 240 நாடுகளில் இப்படத்தை ஓடிடியில் கண்டு களிக்கலாம்.

 

Translate »
error: Content is protected !!