ஆடி பதினெட்டு விழாவை முன்னிட்டு கொடைக்கானலில் கருங்கோழி விற்பனை அமோகம்

ஆடி பதினெட்டு விழாவை முன்னிட்டு கொடைக்கானலில் கருங்கோழி விற்பனை அமோகம் வழக்கத்திற்கு மாறாக கருங்கோழி விற்பனையில் ஈடுபட்டு வரும் வெளியூர் விற்பனையாளர்கள்.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கடந்த இரண்டு நாட்களாக இறைச்சிகளை விற்பனை அதிகரித்து காணப்படுகிறது. மேலும் வரும் செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட இருக்கக்கூடிய ஆடி18 விழாவை முன்னிட்டு ஆடு மற்றும் கோழிகளை விற்பனை அதிகரித்திருக்கிறது அதேபோல் அதனுடைய விலையும் அதிகரித்தே காணப்படுகிறது.

தரைத்தளத்தை காட்டிலும் கொடைக்கானலில் இறைச்சிகளில் விலை உயர்வாக இருக்கிறது என்பது பல வருட குற்றச்சாட்டாக இருந்து வருகிறது இந்நிலையில் கொடைக்கானலில் கருங்கோழி விற்பனை அமோகமாக வெளியூர் நபர்களால் துவங்கப்பட்டு இருக்கிறது.

மேலும் இந்த கருங்கோழிகள் வட மாநிலங்களில் இருந்து கொண்டு வருவதாகவும் இந்தக் கோழியின் மருத்துவ குணம் உள்ளதால் பலரும் இதனை விரும்பி வாங்கி செல்கின்றனர் எனவும் தெரிவிக்கிறார்கள். மேலும் கருங்கோழி மட்டுமல்லாது பல வகையான கோழிகளும் இந்த ஆடி 18 விழாவை முன்னிட்டு விற்பனை அமோகமாக துவங்கி நடைபெற்று கொண்டிருக்கிறது.

Translate »
error: Content is protected !!