சென்னை தலைமைச்செயலகத்தில் பால்வளத்துறை அமைச்சர் நாசர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்:-
அப்போது அவர் கூறியதாவது, ‘‘ஆவின் நிறுவனத்தில் முறைகேடாக 636 பணியிடங்களில் நியமனங்கள் நடைபெற்றிருந்தன. அவை ரத்து செய்யப்பட்டுள்ளன. இனிமேல் அந்தப் பணி யிடங்களுக்கு டிஎன்பிஎஸ்சி மூலமாக தேர்வு நடத்தப்படும். ஆவின் பொருட்களை மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கு புதிய ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன. ஆவின் பால் விலை குறைக்கப்பட்ட பிறகு அதன் விற்பனை அதிகரித்துள்ளது. பால் கொள்முதல் அதிகரிக்கவும் அரசு திட்டமிட்டுள்ளது.