ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் உலக தரவரிசையில் முதல் இடத்தில் உள்ள ஜோகோவிச் அரையிறுதிக்கு முன்னேறி உள்ளார்.
மெல்போர்ன்,
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டிகள் ஆஸ்திரேலியாவில் நடந்து வருகின்றன. இதில் உலக தரவரிசையில் முதல் இடத்தில் உள்ள செர்பியா நாட்டை சேர்ந்த நோவக் ஜோகோவிச் மற்றும் உலக தரவரிசையில் 6-வது இடத்தில் உள்ள ஜெர்மனி நாட்டின் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் ஆகியோர் விளையாடினர்.
இந்தப் போட்டியின் முதல் செட்டை கடுமையாகப் போராடி அலெக்சாண்டர் 6-7(6) கைப்பற்றினார். ஆனாலும், அடுத்தடுத்த செட்களை கைப்பற்றிய ஜோகோவிச் போட்டியில் வெற்றி பெற்றார்.
ஏறக்குறைய 3 மணிநேரம் 30 நிமிடங்கள் வரை நீடித்த இந்த போட்டியில் 6-7(6), 6-2, 6-4, 7-6(8) என்ற செட் கணக்கில் ஸ்வெரேவை வீழ்த்தி ஜோகோவிச் அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார். அவர், கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் அறிமுக வீரராக விளையாடிய அஸ்லான் கரத்சேவ் உடன் அடுத்த போட்டியில் விளையாடுகிறார்.