இங்கிலாந்தில் புதிய வகை கோரோனோ வைரஸ் பரவலால் முழு ஊரடங்கு – பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவிப்பு

இங்கிலாந்தில் மீண்டும் முழு ஊரடங்கை அமல்படுத்துவதாக பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்துள்ளார். அதன்படி நள்ளிரவு முதல் ஊரடங்கு அமலுக்கு வந்தது. பிப்ரவரி மாதம் வரை இந்த ஊரடங்கு நடைமுறையில் இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு ஆன்லைன் வாயிலாக வகுப்புகள் நடைபெறும் என்ற போரிஸ் ஜான்சன், மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டார். வரவிருக்கும் வாரங்கள் புதிய கொரோனா தொற்று நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாகக் கூறிய பிரதமர், நாடு கொரோனாவிற்கு எதிரான போராட்டத்தின் கடைசி கட்டத்தில் இருப்பதாகக் கூறினார்.

 

Translate »
error: Content is protected !!