இங்கிலாந்து ராணுவ தளபதிக்கு கொரோனா தொற்று

நிக் கார்ட்டர், பிரிட்டிஷ் ஆயுதப்படைகளின் தளபதி. 62 வயதான இவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. பின்னர் அவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்பு இராணுவத் தளபதி நிக் கார்ட்டர் மூத்த ராணுவ அதிகாரிகளுடன் ஆலோசனைக்கூட்டம் ஒன்றை நடத்தினார்.

இந்த கூட்டத்தில் பாதுகாப்பு மந்திரி பென் வாலஸ், ஆயுதப்படைகளின் துணைத் தளபதி கார்ல்டன் ஸ்மித் மற்றும் பல ராணுவத் தலைவர்கள் கலந்து கொண்டனர். இந்நிலையில் இராணுவத் தளபதிக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், அவருடன் கலந்தாய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்ட பாதுகாப்பு அமைச்சர் உட்பட அனைத்து மூத்த ராணுவ அதிகாரிகளுக்கும் 10 நாட்கள் தங்களை தனிமைப்படுத்துமாறு சுகாதார அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. அதன்படி, பாதுகாப்பு செயலாளர் பென் வாலஸ் உட்பட அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

 

Translate »
error: Content is protected !!