இணைக்கமிஷனர் சுதாகர் உள்ளிட்ட 8 காவல் ஆளிநர்களுக்கு கமிஷனர் பாராட்டு

சென்னை நகரில் சிறப்பாக காவல் பணிபுரிந்த இணைக்கமிஷனர் சுதாகர் உள்ளிட்ட காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களை சென்னை நகர போலீஸ் கமிஷனர் நேரில் அழைத்து வெகுமதிகள் வழங்கி பாராட்டினார்.

இணைக்கமிஷனர் சுதாகர்

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 3,117 காவல் துறையினர்க்கு ஐஐடி வளாகத்தில் உள்ள கொரோனா சிகிச்சை மையத்தில் மருத்துவர்களின் சிறப்பான சிகிச்சை அளிக்கப்படுவதற்கு உடனிருந்து உதவிய காவல் அதிகாரிகள் கொரோனா தொற்று காலத்தில், முன்கள பணியாளர்களோடு மக்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.

உதவி கமிஷனர் சுதர்சன்

கமிஷனராக இருந்த ஏகே விஸ்வநாதன் இருந்த போது ஐஐடி வளாகத்தில் உள்ள மகாநதி என்ற உறைவிடத்தை தமிழக சுகாதாரத்துறையின் ஒப்புதலுடன் கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட காவல் ஆளிநர்களுக்கான நோய் சிகிச்சை மற்றும் நல மையமாக மாற்றியமைத்தார். மருத்துவ குழுவினர் உதவியுடன் 11.5.2020 முதல் ஆரம்பித்து 02.11.2020 வரை தனி கவனம் செலுத்தி காவலர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சை காலத்தில் 3,117 காவல் துறையினர் மற்றும் அவர்தம் குடும்பத்தினர்கள் அனுமதிக்கப்பட்டு, அவர்களுக்கு சிறந்த சிகிச்சை அளிக்கப்பட்டு பூரண குணமடைந்து வீடு திரும்பினர்.

அதன்பேரில், கொரோனா சிகிச்சை மையத்தை அவ்வப்போது கண்காணித்து, அவற்றிற்கு தேவையான உதவிகளை வழங்கி காவல் ஆளிநர்களின் நலன் காத்திட சென்னை நகர கிழக்கு மண்டல இணைக்கமிஷனர் சுதாகர் மற்றும் கோட்டூர்புரம் சரக உதவி கமிஷனர் சுதர்சன் ஆகியோர் சிறப்பாக பணிபுரிந்தனர். அவர்களை கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் நேற்று நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்தார்.

சென்னை, எம்.கே.பி நகர், மத்திய நிழற்சாலை சாலை, அப்துல்கலாம் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் ஜோசப் செல்வராஜ் (57) என்பவர் பாரிமுனையில் சொந்தமாக கடை நடத்தி வருகிறார். கடந்த 4.11.2020 அன்று வீட்டை பூட்டிவிட்டு, அவரது கடைக்கு சென்று பின்னர் மாலை வந்து பார்த்தபோது, அவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த 35 சவரன் தங்க நகைகள் திருடு போயிருந்தது தெரியவந்தது. அதன்பேரில் அவர் எம்கேபி நகர் போலீசில் புகார் அளித்தார்.

உதவிக்கமிஷனர் ஹரிகுமார்

எம்.கே.பி. நகர் உதவிக்கமிஷனர் ஹரிகுமார் தலைமையில் இன்ஸ்பெக்டர் ரமேஷ், உதவி ஆய்வாளர்கள் பிரேம் குமார், கல்வியரசன், தலைமைக் காவலர் உதயராஜ், முதல்நிலைக் காவலர்கள் கார்த்திக், வினோத் குமார் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. சம்பவ இடத்தினருகில் பொருத்தியிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்ததில், குற்றவாளி முகத்தில் கைக்குட்டை அணிந்து மேற்படி திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டதும், பின்னர் சற்று தொலைவில் நிறுத்தியிருந்த காரில் ஏறி திருட்டு நகைகளுடன் தப்பிச் சென்றதும் தெரியவந்தது.
அதன்பேரில், தனிப்படையினர் தீவிர விசாரணை மற்றும் தேடுதலில் ஈடுபட்டு, மேற்படி தங்க நகைகளை திருடிய குற்றவாளி காரனோடையைச் சேர்ந்த ஜான்சன் நெல்சன் (55) என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து புகார்தாரர் வீட்டில் திருடிய 35 சவரன் தங்க நகைகள் மற்றும் குற்றச் சம்பவத்திற்கு பயன்படுத்திய கார் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

போக்குவரத்து காவலர் ராஜேஷ்

24 மணிநேரத்தில் கொள்ளையனை கைது செய்த உதவிக்கமிஷனர் ஹரிக்குமார் தலைமையிலான தனிப்படையினரை கமிஷனர் வெகுவாக பாராட்டி நற்சான்றிதழ் வழங்கினார். மேலும் மக்களை கவரும் வகையில் சமிக்ஞைகளுடன் போக்குவரத்து சீர் செய்வதுடன், வயதான நபர்களை கையை பிடித்து சாலையை கடக்க உதவும் பெரியமேடு போக்குவரத்து காவலர் ராஜேஷ் என்பவரையும் கமிஷனர் நேரில் அழைத்து பாராட்டினார்.

Translate »
error: Content is protected !!