இன்று முதல் மின்சார ரயிலில் பொதுமக்கள் பயணிக்க அனுமதி

சென்னை புறநகர் ரயில் சேவையில் இன்று முதல் பொதுமக்கள் பயணிக்கலாம் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 

ரெயில் மற்றும் ரயில் நிலையங்களில் முகக்கவசம் அணியாமல் பொதுமக்கள் சென்றால் அவர்களிடம் ரூ .500 அபராதம் வசூலிக்கப்படும் என்றும் தெற்கு ரயில்வே எச்சரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது.

பெண்கள் , பெண்களுடன் பயணிக்கக்கூடிய 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள் எந்த நேரத்திலும் பயணம் செய்யலாம் என்றும், உச்ச நேரம் என்று அழைக்கப்படும் முக்கிய நேரத்தை தவிர்த்து பொது நேரங்களில் ஆண்கள் பயணம் செய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆண்கள் காலை 9.30 மணி முதல் மாலை 4 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் கடைசி நேரத்திலும் பயணம் செய்யலாம். இதேபோல் மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்கள், நீதிமன்ற ஊழியர்கள் மற்றும் அத்தியாவசிய ஊழியர்கள் அவர்கள் விரும்பும் பல முறை ரயிலில் பயணிக்க அனுமதிக்கிறது. இந்நிலையில்  ரயில்களின் இயக்கத்தில் எந்த மாற்றமும் ஏற்படாது என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது,

நீண்ட தூர எக்ஸ்பிரஸ் ரயில்களுக்கு ஒரே ஒரு பாதை மட்டுமே அனுமதிக்கப்படுகிறது. அவர்களுக்கு திரும்ப டிக்கெட்(ரிட்டன் டிக்கெட்) வழங்கப்படுவதில்லை.

 

Translate »
error: Content is protected !!