தமிழகத்தில் இன்று மட்டும் 1,714 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது; 2,311 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இது தொடர்பாக, தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் இன்று 1,714 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. தொற்று உறுதியானவர்களில் ஆண்கள் 1,052 பேர். பெண்கள் 662 பேர். இதன் மூலம் மொத்த எண்ணிக்கை 7,63,282 அதிகரித்துள்ளது.
சென்னையில் 479 பேருக்கு இன்று கொரோனா நேர்மறை உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையைத் தவிர 36 மாவட்டங்களில் 1,235 பேருக்குத் தொற்று உள்ளது.
தமிழகத்தில் கொரோனா கண்டறியப்பட்டு தனிமைப்படுத்துதலில் உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 14,470. மொத்தம் தொற்று உள்ளவர்கள் எண்ணிக்கையில் ஆண்கள் 4,61,157 பேர்; பெண்கள் 3,02,092 பேர் மற்றும் மூன்றாம் பாலினத்தவர் 33 பேர் ஆவர்.
இன்று டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 2,311 பேர்; இதுவரை மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனவர்களின் மொத்த எண்ணிக்கை, 7,37,281 ஆகும். இன்று கோவிட் தொற்றுக்கு 18 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் சென்னையில் மட்டும் 5 பேர் பலியாகினர். தமிழகத்தில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 11,531 ஆக உள்ளது.
கடந்த 2 நாட்களாக கொரோனா தொற்று புதிதாக உறுதிசெய்யப்படாத மாவட்டமாக இருந்த பெரம்பலூரில், இன்று மீண்டும் 2 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.