இலங்கை அகதிகள் முகாமில் வசிப்பவர்களுக்கு திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் நிவாரண பொருட்களை வழங்கினார்.
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் தொகுதிக்குட்பட்ட லேனா விளக்கு பகுதியில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் வசிப்பவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. திமுக சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திமுக இளைஞரணி செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
அப்போது முதலமைச்சர் கொரோனா நிவாரண நிதிக்காக உண்டியல் சேமிப்பான ரூ. 5 ஆயிரத்தை அனுப்பி இரண்டு சிறுமிகளுக்கு தலையூர் டாப் வழங்கி உதயநிதி ஸ்டாலின் பாராட்டினார். இதனைத் தொடர்ந்து திமுக நிர்வாகிகள் உதயநிதி ஸ்டாலினுக்கு வீர வாள் மற்றும் சூலாயுதத்தை பரிசாக வழங்கினார். முன்னதாக நிகழ்ச்சியில் பேசிய உதயநிதி ஸ்டாலின் இலங்கை தமிழர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு பத்தாண்டுகளுக்குப் பிறகு திமுக அரசு குடும்ப தலைவருக்கு 12 ஆயிரமாக உயர்த்தி அறிவித்துள்ளதாக கூறினார்.
நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன், சட்டமன்ற உறுப்பினர் முத்துராஜா மற்றும் திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.