ஊரடங்கு காலத்திலும் வங்கி சேவை தொடரும் – வங்கியாளர்கள் குழுமம் அறிவிப்பு

ஊரடங்கில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை வங்கிகள் ஊரடங்கு நீட்டிக்கப்பட்ட காலத்திலும் தொடரும் என்று தமிழ்நாடு மாநில வங்கியாளர்கள் குழுமம் தெரிவித்துள்ளது.

அது தொடர்பாக தமிழ்நாடு மாநில வங்கியாளர்கள் குழுமத்தின் தலைவர் எஸ்.சி. மொகந்தா தெரிவித்துள்ளதாவது

தமிழக அரசு ஊரடங்கினை வருகிற 31-ந்தேதி காலை 6 மணி வரை நீட்டித்துள்ளது. .டி.எம். மையங்கள் செயல்பட அனுமதி :-

* வங்கி கிளைகளின் வர்த்தக நேரம் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை என்பது தொடரும். வங்கி கிளைகளில் ஊழியர்கள் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை பணியாற்ற வேண்டும்.

* நிர்வாக, கோட்ட, மண்டல அலுவலகங்கள் வழக்கமான பணி நேரங்களில் பணியாற்ற வேண்டும்.

* வங்கிகள் சுழற்சி முறையில் 3-ல் ஒரு பங்கு பணியாளர்களை கொண்டு இயங்கவேண்டும்.

* பணம் எடுத்தல், பணம் செலுத்துதல், என்..எப்.டி., ஆர்.டி.ஜி.எஸ். உள்பட பல்வேறு முறைகளில் பணம் அனுப்புதல், அரசு தொடர்பான வர்த்தகம், காசோலைகளை சரிபார்த்து வழங்குதல் உள்ளிட்ட அத்தியாவசிய அடிப்படை சேவைகளை வங்கி கிளைகள் வழங்கவேண்டும்.

* .டி.எம். எந்திரம் உள்பட பண சுழற்சி சேவைகள் அனைத்து நேரங்களிலும் முழுமையாக இயங்குவதை வங்கிகள் உறுதி செய்யவேண்டும்.

* முகக்கவசம் அணிதல், கைகளை சீரான இடைவெளியில் கழுவுதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் உள்ளிட்ட கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் வங்கிகளில் கட்டாயம் பின்பற்றப்படவேண்டும்.

இந்த வழிகாட்டுதல்கள் மாநிலத்தில் நிலவும் சூழலுக்கு ஏற்ப மாற்றியமைக்கப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Translate »
error: Content is protected !!