பார்சல் சர்வீஸ் அலுவலகத்தில் சிக்கிய 25 கிலோ எபிடெரின் போதைப்பொருள்: டிஆர்ஐ அதிகாரிகள் நடவடிக்கை

கேரளா மாநிலம் எர்ணாகுளத்துக்கு பார்சல் சர்வீஸ் மூலம் கடத்தப்படவிருந்த 25 கிலோ எபிடெரின் போதைப்பொருளை மத்திய வருவாய்ப் புலனாய்வுப்பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

சென்னையில் இருந்து கேரளாவுக்கு பார்சல் சர்வீஸ் மூலம் போதைப்பொருள்கள் கடத்தப்படுவதாக மத்திய வருவாய்ப்புலனாய்வு பிரிவு என்னும் டிஆர்ஐ அதிகாரிகளுக்கு தகவல் வந்தது. அதன்பேரில் டிஆர்ஐ அதிகாரிகள் சென்னை பாரிமுனை, வால்டாக்ஸ் ரோட்டில் ரகசியமாக கண்காணித்தனர்.

அங்குள்ள தனியார் பார்சல் அலுவலகத்தில் நுழைந்து சோதனை நடத்திய போது அங்கு 15 அட்டைப்பெட்டிகளுக்குள் சுமார் 25 கிலோ ‘ப்சுயோ எபிடெரின்’ போதைப்பொருள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. பாத்ரூம் கழிவறை கோப்பைகள் பெயரில் உள்ள அட்டைப்பெட்டியின் லேயருக்குள் அவை வெளியில் தெரியாதபடி மறைத்து வைக்கப்பட்டிருந்தது. அதனை பறிமுதல் செய்த டிஆர்ஐ அதிகாரிகள் அது எங்கிருந்து வந்துள்ளதா என்பது குறித்து விசாரணை நடத்திய போது ஐரோப்பா கடல் மாவட்டப்பகுதிகளில் இருந்து சென்னைக்கு பார்சல் மூலம் வந்து பின்னர் கேரளா எர்ணாகுளத்துக்கு செல்லவிருந்தது தெரியவந்தது.

தடை செய்யப்பட்ட போதை பொருளான எபிடெரினை ஐரோப்பியாவில் இருந்து அனுப்பியவர்கள் யார், கேரளா எர்ணாகுளத்தில் அது யாருக்கு போய் சேர்கிறது போன்ற விவரங்கள் குறித்து டிஆர்ஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Translate »
error: Content is protected !!