திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே எஸ்ஐ வாங்கிய போண்டாவில் முழு பிளேடு ஒன்று இருந்தது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே விளாம்படி காவல் நிலையத்தில் எஸ்ஐயாகஇருப்பவர் கனகராஜ்.இவர் நேற்று நிலக்கோட்டை பஸ் நிலையம் அருகில் உள்ள டீக்கடையில் டீகுடித்து விடித்து 5 போண்டாவை வீட்டிற்கு பார்சல் வாங்கியுள்ளார்.
பின்பு வீட்டிற்கு சென்றதும் போண்டாவை சாப்பிடும் போது அதில் முழு பிளேடு ஒன்று இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார்.உடனே இதுகுறித்து உணவு பாதுகாப்பு துறையினருக்கு தகவல் அளித்துள்ளார்.இதனை தொடர்ந்து உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அந்த கடைக்கு சென்று ஆய்வு செய்து உரிமையாளருக்கு நோட்டீஸ் வழங்கினர்.மேலும் போண்டாவில் முழு பிளேடு இருந்த சம்பவம் அப்பகுதி மக்களிடம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.