கொரோனா இரண்டாம் அலையிலும் கழகத்தின் “ஒன்றிணைவோம் வா” திட்ட உதவிகளை தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்.
நாடு முழுவதும் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை வேகமாக பரவி வந்த நிலையில் தற்போது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் கொரோனா தாக்கம் குறைந்து வருகிறது.
இதனால் பலரும் வேலைவாய்ப்பின்றி தவித்து வருகின்றனர். இதன் அடிப்படையில் அனைவர்க்கும் உதவும் நோக்கத்தில் புதிய திட்டம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.
இதை குறித்து முதல்வர் ஸ்டாலின் வெளிட்ட பதிவு,
கொரோனா இரண்டாம் அலையிலும் கழகத்தின் “ஒன்றிணைவோம் வா” திட்ட உதவிகள் தொடர்கின்ற.
கோவையில் 10.17 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு 7 வகை அத்தியாவசியப் பொருட்கள் வழங்கும் பணியைத் தொடங்கி வைத்தேன். பெருந்துறையில் 300 முன்களப் பணியாளர்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை வழங்கினேன் என முதலமைச்சர் ஸ்டாலின் பதிவிட்டார்.