நாளை முதல் தளர்வுகள் எதுவும் இன்றி முழு ஊரடங்கு அமல்படுத்தப்படவுள்ள நிலையில், சென்னை கோயம்பேடு உள்ளிட் காய்கறி சந்தைகளில் அவற்றின் விலை பன்மடங்கு உயர்ந்துள்ளது.
ஊரடங்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து ஒரு வார காலத்திற்கு தேவையான காய்கறிகளை வாங்க ஏராளமான மக்கள் கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் இன்று ஈக்கள் போல குவிந்தனர்.
இதனால் காய்கறி விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது. வெங்காயம் ஒரு கிலோ 20 ரூபாயாக இருந்தது நேற்று ஒரே நாளில் 70 ரூபாயாக உயர்ந்துள்ளது. அதே போல தக்காளி கிலோ 10 ரூபாயாக இருந்தது இன்று 40 ரூபாயாகவும், உருளைக்கிழங்கு 25 ரூபாயிலிருந்து 80 ரூபாய் ஆகவும், கேரட் 1 கிலோ 50 ரூபாயிலிருந்து 150 ரூபாய்க்கு உயர்ந்தது. மேலும் கத்திரிக்காய் 30 ரூபாய்க்கு விற்பனையானது 160 ரூபாயாகவும் உயர்ந்தது. பொருள் கிடைக்காது என்பதால் பொதுமக்கள் பேரம் பேசாமல் காய்கறிகளை அள்ளிப்போட்டுக் கொண்டு சென்றனர்.