ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வெல்லும் தமிழக வீரர்களுக்கு தலா ரூ .3 கோடி – முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வெல்லும் தமிழக வீரர்களுக்கு தலா ரூ .3 கோடி ரூபாய் பரிசு தொகை வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்

சென்னை,

விளையாட்டு வீரர்களுக்கான கொரோனா தடுப்பூசி முகாமை முதலமைச்சர் மு..ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.   இதைத் தொடர்ந்து, ஒலிம்பிக்கில் பங்கேற்கும் விளையாட்டு வீரர்களுக்கு தலா 5 லட்சம் ரூபாய் ஊக்கத் தொகை வழங்கினார்.

ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வெல்லும் தமிழக வீரர்களுக்கு தலா ரூ .3 கோடியும், வெள்ளிப் பதக்கம் வென்றால் ரூ .2 கோடியும், வெண்கலப் பதக்கம் வென்றால் ரூ .1 கோடியும் வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

Translate »
error: Content is protected !!