கன்னியாகுமரி மணக்குடி பாலத்துக்கு மறைந்த முன்னாள் தமிழக அமைச்சர் “லூர்தம்மாள் சைமன்” பெயரிடப்பட்டது

சென்னை

கன்னியாகுமரி மாவட்டம் மணக்குடி பாலத்துக்கு மறைந்த முன்னாள் தமிழக அமைச்சர் லூர்தம்மாள் சைமன் பாலம் என்று பெயர் சூட்டப்படுகிறது. இதுகுறித்து ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ஹன்ஸ் ராஜ் வர்மா வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:

கன்னியாகுமரி மாவட்டத்தில் பழையாற்றின் குறுக்கே மேலமணக்குடி, கீழமணக்குடி கிராமங்களை இணைப்பதற்கு நெடுஞ்சாலைத் துறை மூலம் உயர் நிலை பாலம் கட்டப்பட்டது. இந்தப் பாலத்துக்கு மறைந்த முன்னாள் தமிழக அமைச்சர் லூர்தம்மாள் சைமன் பெயர் சூட்டப்படும் என கன்னியாகுமரியில் நடந்த விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

இந்த அறிவிப்பைச் செயல்படுத்தும் வகையில், அதற்கான கடிதத்தை குமரி மாவட்ட மாவட்ட கலெக்டர் அரசுக்கு அனுப்பி வைத்திருந்தார். மேலும் கடிதத்தில் உள்ளாட்சித் துறை, வருவாய் கோட்டாட்சியர், நெடுஞ்சாலை கோட்டப் பொறியாளர், காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் சார்பில் ஆட்சேபணை ஏதும் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து மணக்குடி ஊராட்சியில் அமைந்துள்ள பாலத்துக்கு லூர்தம்மாள் சைமன் பாலம் எனப் பெயரிடப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.

 

Translate »
error: Content is protected !!