தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் கீழ் செயல்படும் அரசு கள்ளர் பள்ளிகள் மற்றும் மாணவர் விடுதிகளை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைசார் சிவசங்கர் ஆய்வு மேற்கொண்டார்.
முன்னதாக தேவதானபட்டி அருகே புல்லக்காப்பட்டி பகுடதியில் உள்ள அரசு கள்ளர் உயர்நிலை பள்ளியின் ஆய்வு கூடங்களை ஆய்வு செய்த பின் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு பாடப்புத்தகங்களை வழங்கினார்.
இதனை அடுத்து எ.புதுப்பட்டியில் இயங்கி வரும் அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளி, அரசு பிற்படுத்தப்பட்டோருக்கான மாணவ மாணவியர் விடுதிகளை ஆய்வு மேற்கொண்டார். இதனை அடுத்து செய்தியாளர்களை சந்தித்த போது தான் வகிக்கும் துறை சாரந்த பள்ளிகள் மற்றும் மாணவர்கள் விடுதிகளின் கட்டமைப்பு மற்றும் மாணவர்களுக்கு தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை ஆய்வு மேற்கொண்டதாக தெரிவித்தார்.
மேலும் அரசு கள்ளர் பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறைகள் குறித்து உரிய ஆய்வு செய்து ஆசிரியர்கள் நியமனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும், அரசு கள்ளர் பள்ளிகள் மற்றும் மாணவர் விடுதிகளில் மாணவர்களின் நலன் கருதி உரிய கட்டமைப்புகளை உருவாக்குவதற்காக தற்பொழுது ஆய்வு மேற்கொண்டு வருவதாக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவசங்கர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இந்த ஆய்வின் போது தேனி மாவ்ட்ட ஆட்சியர் முரளிதரன் மாவட்ட கண்காணிப்பாளர் பிரவீன் உமேஷ் டோங்கரே பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சரவணகுமார் திமுக வடக்கு மாவட்ட செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் மாநில உயர்நிலை திட்ட குழு உறுப்பினர் மூக்கையா மற்றும் அரசு அதிகாரிகள் திமுக நிர்வாகிகள் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.