காற்றாட்டு வெள்ளத்தில் சிக்கிய 6 நபர்களில் 5 பேர் உயிருடன் மீட்ட நிலையில் ஒருவரின் உடைலை 15 கிலோமீட்டர் தொலைவில் வராகநதி ஆற்றில் இறந்த நிலையில் உடல் மீட்ப்பு.
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மேற்கு தொடர்சி மலை ஒட்டியுள்ள கல்லாற்று பகுதியில் பெரியகுளம் தென்கரை பகுதியை சேர்ந்த செல்லராமு, ராமசாமி அவர்களுடை நணபர்கள் 6 இளைஞர்கள் குளிக்க சென்ற நிலையில் மாலையில் மேற்கு தொடர்சி மலை பகுதியில் பெய்த கன மழையின் காரணமாக கல்லாற்றில் காற்றாட்டு வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஆற்றில் குளித்த இளைஞர்கள் வெள்ள நீரில் சிக்கிய நிலையில் நேற்று இரவில் 5 நபர்கள் உயிருடன் மீட்டக்கப்பட்டனர்.
இதில் ராமசாமி என்பவருக்கு காயம் அடைந்த நிலையில் பெரியகுளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் காணாமல் போன செல்லராமு எனபவரை 30க்கும் மேற்பட்ட தீயணைப்புத்துறையினர் நல்லிரவு முதல் தேடிய நிலையில் போதிய வெளிச்சம் இல்லாதால் இரவு தேடும் பணி நிறுத்தபட்டது. இதனை தொடர்ந்து இன்று காலை 6 மணி முதல் தீயணைப்புத்துறையினர் மற்றும் செல்லராமுவின் உறவினர்கள் 4 குழுக்கலாக பிரிந்து தேடும் பணியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் இளைஞர்கள் குளித்த இடத்தில் இருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் பெரியகுளம் அருகே உள்ள மேல்மங்களம் பகுதியில் உள்ள வராகநதி ஆற்று பகுதியில் பலத்த காயங்களுடன் உயிரிலந்த நிலையில் செல்லராமுவின் உடலை மீட்டனர். மேலும் ஆற்று நீரில் அடித்து செல்லப்பட்டு உயிரிலந்த செல்லராமுனின் உடலை பெரியகுளம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைகாக அனுப்பி வைக்கப்பட்டது.