கால்பந்து விளையாட்டு மீதான அவரது மோகம் பமாரடோனாவை தனிப்பெரும் வீரராக அடையாளம் காட்டியது. அதன் வெற்றி 1986 ஆம் ஆண்டு கிடைத்தது. அந்தாண்டு அர்ஜென்டினா அணியின் கேப்டனாக செயல்பட்டு கால்பந்து உலகக்கோப்பையை வென்று கொடுத்தார்.
கால்பந்து விளையாட்டில் இருந்து ஓய்வுபெற்ற பிறகு பல கிளப் அணிகளுக்கு பயிற்சியாளராக செயல்பட்ட அவர், இறுதியாக ஜிம்னாசியா டிலா பிளாடா அணிக்கு பயிற்சியாளராக இருந்தாா். மரோடோனா 2000 ஆம் ஆண்டு போதைப்பொருள் பழக்கத்தால் மாரடைப்பு ஏற்பட்டு மரணத்தின் விளிம்பு வரை சென்று அதிலிருந்து மீண்டார்.
அதன்பிறகு போதைப் பொருள் பயன்பாட்டை நிறுத்திக் கொண்ட அவர், சமீபத்தில் மூளையில் அறுவைச் சிகிச்சை செய்துகொண்டார். இதன்பின் கடந்த 11 ஆம் தேதி வீடு திரும்பிய அவருக்கு நேற்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிர்பிரிந்ததாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் கால்பந்து ஜாம்பவான் மரடோனாவின் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.