சென்னை பெருநகர காவல்துறை, விஞ்ஞான வளர்ச்சிக்கேற்ப விவேகத்துடன், பொதுமக்கள் பாதுகாப்பை உறுதிபடுத்துவதில் செம்மையாக பணியாற்றி வருகின்றது. மேலும் குற்றங்களை தடுத்தல், குற்ற விழிப்புணர்வு ஏற்படுத்துதல், நடந்த குற்றங்களை உடனுக்குடன் கண்டறிதல் போன்ற நடவடிக்கைகளின் மூலம் மக்கள் தொகை அதிகம் உள்ள இந்தியாவில் மக்கள் நலத்திலும், பாதுகாப்பிலும் முதன்மையாக சென்னை நகரம் விளங்குகிறது.
சென்னை பெருநகர காவல்துறையினருடைய காவல் அதிகாரிகள் முதல் ஆளிநர்கள் வரை பொதுமக்களை பாதுகாப்பதில் மக்கள் மனதில் சிறப்பான இடத்தை பெற்றும், பேரிடர் காலங்களில் மக்கள் பாதுகாப்புடன் கொரோனா தொற்று தடுப்பதிலும், அர்ப்பணிப்புடனும் தமிழக அரசின் சீரிய வழிகாட்டுதலோடு முன்கள பணியில் காவல் ஆணையாளர் மகேஷ்குமார் அகர்வால் முதல் காவல் ஆண், பெண் ஆளிநர்கள் வரை பணி செய்து வருகின்றனர். மக்களுக்காக பல்வேறு சிறப்பு சேவைகளை அறிமுகப்படுத்தியும், வீடியோ கால் புகார் வசதி, அவர் அவர் பகுதிகளிலேயே 12 காவல் மாவட்டங்களில் சைபர் குற்ற பிரிவுகள் மூலம் உடனடி தீர்வு, ரோந்து வாகனத்தில் புகார் செய்யும் வசதி, அவசர அழைப்புக்கு இரவு ரோந்து அதிகாரிகளை தொடர்பு கொள்ளும் வசதி, போதைக்கெதிரான நடவடிக்கை (Drive Against Drugs), கொரோனா விழிப்புணர்வு போன்ற சிறப்பான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
சென்னை பெருநகர காவல்துறைக்கு, கலிப்போர்னியா மாகாணத்தில் சான்டியாகோ என்ற இடத்தை தலைமையிடமாக கொண்டு, சென்னை பெருங்குடியில் இயங்கி வருகின்ற Chip Design Company “Qualcom” என்ற நிறுவனம் ஆளில்லா நவீன ரக ட்ரோன்களை வழங்கியுள்ளது.
சென்னை பெருநகர காவல்துறையின், குற்ற தடுப்பிற்காகவும், கூட்ட நெரிசல் பகுதிகளை கண்காணிக்கவும், போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்களை கண்காணிக்கவும் மற்றும் கொரோனா தொற்று அடிப்படை காரணமாக உடல் வெப்பத்தை கண்டறிந்து கண்காணிக்கவும் உதவியாக “ANAFI THERMAL DRONE” என்ற 3 டிரோன்கள் பிரான்ஸ் நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இந்த ஆளில்லா காட்சிகளை பதிவு செய்யும் பறக்கும் தட்டு சுமார் 26 நிமிடங்களில் 4 கிலோ மீட்டர் தூரம் லகுவாக பறக்கும் திறனுடன், 10 முதல் 40 டிகிரி வெப்ப தன்மையை அறியும் வகையில் இரவில் துரிதமாக கண்காணித்து காட்சிகளை பதிவுசெய்யும் தன்மையுடையது. இதனுடைய மதிப்பு சுமார் ரூ. 15 லட்சம் ஆகும். இந்த பறக்கும் கண்காணிக்கும் டிரோனை “Qualcom” என்ற நிறுவனத்தை சார்ந்த Facility Manager திரு.ரமேஷ் செல்வராஜ், பொறியாளர் குழுவைச்சேர்ந்த தரணிகுமார், அருண் ஜனார்த்தனன், மற்றும் திரு. M.S.பாலா, தலைவர், இந்தியன் இன்ஸ்டியூட் ஆப் இன்பர்மேசன் டெக்னாலஜி & ஐடி நிபுணர் ஆகியோர், காவல் துறை பொதுமக்கள் சேவைக்காக நேற்று சென்னை பெருநகர காவல்துறை ஆணையாளர் மகேஷ்குமார் அகர்வாலிடம் வழங்கினர்.
********