தேனி மாவட்டம் பெரியகுளம் ஜெயமங்கலம் அருகே உள்ள இந்த வராகநதியில் இருந்து வரும் நீரை நம்பி 2500த்திற்க்கும் மேற்ப்பட்ட ஏக்கரில் விவசாயம் செய்து வருவதோடு 10க்கும் மேற்ப்பட்ட கிரமப்பகுதிகளுக்கு வராகநதி ஆற்றில் உரை கிணறுகள் அமைத்தும் குடிநீர் எடுத்துச்செல்கிண்றனர்.
மேலும் ஊராட்சி குப்பை கழிவுகளை தரம் பிரித்து உரம் சேகரிக்க பல ஆயிரம் செலவில் குப்பைகளை தரம் பிரிக்கும் கொட்டகை தளம் அமைத்தும் செயல்பாடின்றி உள்ளது. இந்நிலையில் இந்த ஊராட்சி பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைக்கழிவுகளை சேகரித்து ஊராட்சி ஊழியர்களே வராகநதி ஆற்றின் கரையோரங்னளில் கொட்டி குப்பை கிடங்காக மாற்றி வருகிறண்றனர்.
இந்நிலையில் வராகநதியை சுற்றி பல்வேறு விவசாய நிலங்கள் மற்றும் பல கிராம பொதுமக்களுக்கு குடிநீர் ஆதாரமாக இருப்பதால் இந்த வராக நதியில் கழிவு குப்பைகளை கொட்டுவதால் நீர் வளத்தை கெடுத்தும் பொதுமக்களின் உடல் நலத்திற்கும் சுகாதார கேடு விளைவித்தும் வருகிறது. எனவே ஜெயமங்கலம் ஊராட்சி நிர்வாகம் வராக நதியில் குப்பைகளை கொட்டாமல் மாற்று இடத்தில் கொட்டி நீர்நிலைகளை பாதுகாக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது