இத்தாலி நாட்டில் கேபிள் கார் அறுந்து விழுந்ததில் 13 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இத்தாலியில் உள்ள மேகியோர் ஏரியின் கரையில் உள்ள ஸ்டெரசா என்ற பகுதியில் இருந்து மோட்டரோன் மலை உச்சிக்கு கேபிள் கார் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேட்ரோன் மலைக்கு செல்பவர்கள் இந்த ரோப்காரில் பயணம் செய்து அந்த கரையை அடைவார்கள். 20 நிமிடங்கள் பயணத்தின் போது நடுவில் ஒரு இடத்தில் கேபிள் கார் நிறுத்துவது வழக்கம்.
இந்நிலையில், நேற்று மோட்டரோன் மலை உச்சிக்கு கேபிள் கார் பயணமானது. அதில் சுமார் 13 பேர் பயணம் செய்தனர். இந்நிலையில் கேபிள் கார் திடீரென பாரம் தாங்க முடியாமல் அறுந்து விழுந்தது. இதில் ரோப் காரில் பயணம் செய்த 11 பேரும் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த பயங்கர விபத்து தொடர்பாக தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்துக்கு மீட்புக் குழுவினர் விரைந்து சென்றனர்.
அதிர்ஷ்டவசமாக ரோப்காரில் உயிருடன் இருந்த 2 குழந்தைகளை மீட்புக்குழுவினர் மீட்டனர். ஏர் ஆம்புலன்ஸ் மூலம் டுரின் நகரில் உள்ள ஆஸ்பத்திரிக்கு குழந்தைகளை அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு மீட்புப் பணிகள் தொடர்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விபத்தில் பலியான குடும்பத்தினருக்கு இத்தாலி பிரதமர் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.