கொடைக்கானலில் மருத்துவ குணம் கொண்ட கொட்டம்பழம் விளைச்சல் துவக்கம்

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் பெரும்பாலான இடங்கள் வனப்பகுதியாகவே இருந்து வருகிறது.

இந்நிலையில் வனப்பகுதியை ஒட்டி உள்ள பகுதிகள் நகர் பகுதி உள்ளிட்ட சில இடங்களில் கொட்டாம்பழம் மரங்கள் அதிக அளவில் இருந்தது. இந்த வகை மரங்கள் தற்போது அழிந்து வரும் சூழல் ஏற்பட்டுள்ளது.

தற்போது கொடைக்கானலில் பாம்பார்புரம் , அப்சர்வேட்டரி , ஏரிசாலை , நாயுடுபுரம் , செண்பகனூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கொட்டாம்பழம் விளைச்சல் அதிகரித்துள்ளது ..இந்த வகை பழங்கள் இனிப்பு துவர்ப்பாகவும் மருத்துவ குணம் அதிகம் கொண்ட பழமாக இருக்கிறது ..எனவே அழிவின் விளிம்பில் இருக்கும் கொட்டம்பழம்  வகை மரங்களை வனத்துறை அதிக அளவில் நடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.

 

Translate »
error: Content is protected !!