திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே பள்ளங்கி கோம்பை மலை கிராமம் அமைந்துள்ளது..இங்கு வசிக்கும் மக்களுக்கு விவசாயமே பிரதான தொழிலாக இருந்து வருகிறது..மேலும் புரெவி புயல் எதிரொலியாக கொடைக்கானல் மலை கிராமங்களில் தொடர் மழை பெய்து வருகிறது.. மேலும் பள்ளங்கி கோம்பை பகுதியில் காற்றாட்டு வெள்ளம் ஏற்பட்டு 50 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் ஆற்றை கடக்க முடியாமல் அவதி அடைந்து வருகின்றனர்.. மேலும் கயிரை கட்டி ஆபத்தான நிலையில் பயணித்தும் வருகின்றனர்.. அரசு அதிகாரிகள் தற்போது வரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்..எனவே தமிழக அரசு மக்களை காப்பற்ற பாலம் அமைத்து தர வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்..