கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக, வரும் 1ம் தேதி முதல் புதிய கட்டுப்பாடுகள் மற்றும் வழிகாட்டுதல்களை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
கொரொனா கட்டுப்பாட்டு மண்டலங்களில் அத்தியாவசிய நடவடிக்கைகள் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது அதன்படி, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள், மத்திய அரசின் வழிகாட்டுதல்களை, கட்டுப்பாடுகளை கண்டிப்பாக பின்பற்றுவதை உறுதி செய்ய வேண்டும்.
கட்டுப்பாட்டு மண்டலங்களில் அத்தியாவசிய நடவடிக்கைகள் மட்டுமே அனுமதிக்கப்படும். மருத்துவ அவசரநிலைகள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் மற்றும் சேவைகளை வழங்குவதைத் தவிர்த்து, இந்த மண்டலங்களுக்குள் அல்லது வெளியே மக்கள் நடமாட்டம் இல்லை என்பதை உறுதிப்படுத்தப்படுத்த வேண்டும்.
கொரோனா நோயாளிகளை விரைவாக தனிமைப்படுத்துவது, சிகிச்சை வசதிகள் உறுதி செய்யப்படும். கொரோனாவுக்கான பொருத்தமான நடத்தை குறித்து சமூகங்களில் விழிப்புணர்வு உருவாக்கப்படும்.
முகக்கவசம் அணிவது, கை சுகாதாரம் மற்றும் சமூக இடைவெளியை கண்டிப்பாக அமல்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும். நெரிசலான இடங்களில், குறிப்பாக சந்தைகள், வாராந்திர பஜார்கள் மற்றும் பொதுப் போக்குவரத்து ஆகியவற்றில் சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பதற்காக, சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் ஒரு நிலையான இயக்க நடைமுறையை வெளியிடும். இது மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களால் கண்டிப்பாக செயல்படுத்தப்படும்.
சினிமா அரங்குகள் மற்றும் தியேட்டர்கள், 50 சதவீத இருக்கைகளுடன் செயல்படலாம். கண்காட்சி அரங்குகள், வணிகத்திலிருந்து வணிக நோக்கங்களுக்காக மட்டும் செயல்படலாம்.
சமூக, மத, விளையாட்டு, பொழுதுபோக்கு, கல்வி, கலாச்சார, மதக் கூட்டங்கள், மண்டபத்தின் திறனில் அதிகபட்சம் 50 சதவீதம் வரை, மூடிய இடங்களில் 200 நபர்களின் உச்சவரம்புடன் செயல்படலாம்.
மாநிலத்திற்கு உள்ளே மற்றும் வெளியேயான போக்குவரத்திற்கு எந்த தடையும் இல்லை மாநிலத்திற்கு உள்ளே மற்றும் வெளியே வர்த்தக ரீதியிலான போக்குவரத்திற்கு எந்த தடையும் இல்லை.