கொரோனா தடுப்பு மருந்து 95% வெற்றி: பைசர் நிறுவனம் அறிவிப்பு

அமெரிக்காவின் பைசர் நிறுவனமும், ஜெர்மனியின் பயான்டெக் நிறுவனமும் இணைந்து கண்டுபிடித்த கொரொனா தடுப்பு மருந்து, 95% வெற்றி பெற்றிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

உலகையே முடக்கிப் போட்ட கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டறியும் பணியில் இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ஈடுபட்டுள்ளன. இதில், அமெரிக்காவின் பைசர் நிறுவனமும், ஜெர்மனியின் பயான்டெக் நிறுவனமும் இணைந்து கண்டுபிடித்துள்ள மருந்து, 95% சதவீதம் திறன் கொண்டிருப்பது சோதனையில் கண்டறியப்பட்டுள்ளதாக, பைசர் தெரிவித்துள்ளது.

அடுத்த சில நாட்களில் அமெரிக்க தடுப்பு மருந்து அமைப்பிடம், இதற்கு ஒப்புதல் பெறப்படும் என்று தெரிவித்துள்ள பைசர் மருந்து நிறுவனம், 170 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு பரிசோதனை செய்ததில் 95% வெற்றி கிடைத்திருப்பதாக விளக்கம் தந்துள்ளது.

இந்த தடுப்பு மருந்தால் வயதானவர்களுக்கும் பாதிப்பு ஏற்படவில்லை; தீவிர பக்க விளைவுகளும் உண்டாகவில்லை என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

எனினும், பைசர் நிறுவனத்தின் தடுப்பு மருந்து, மைனஸ் 94 டிகிரி குளிர் நிலையில் பாதுகாக்கப்பட வேண்டும். எனவே, வெப்ப மண்டலங்களில் இந்த தடுப்பு மருந்துகளை எடுத்துச் செல்வது சவால் நிறைந்ததாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. –

Translate »
error: Content is protected !!