கொரோனா நிதிக்கு விருது பணம் ரூ .10 லட்சத்தை அளிக்கிறேன் – சங்கரய்யா

தமிழகத்திற்கும் தமிழகத்தின் வளர்ச்சிக்கும் பெரும் பங்களிப்பு செய்தவர்களை பெருமைப்படுத்தும் விதமாக, முதல்வர் மு..ஸ்டாலின் , ‘தகைசால்தமிழர்என்ற என்ற விருது வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார். 

அதன்படி, இந்த விருது மார்க்சிச கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் என்.சங்கரையாவுக்கு வழங்கப்பட்டது.

இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில்,

தகைசால் தமிழர் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட என். சங்கரய்யாவுக்கு 10 லட்சம் ரூபாய்க்கான காசோலையும் பாராட்டு சான்றிதழும் வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி நடைபெறும் சுதந்திர தின விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் என்.சங்கரய்யா வெளிட்டுள்ள அறிக்கை, எனது சேவையை பாராட்டும் வகையில் அறிவிக்கப்பட்டுள்ள இவ்விருதினை ஏற்றுக் கொள்வதோடு, எனக்கு இந்த விருதினை அளித்திருக்கிற முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த விருதிற்காக அளிக்கப்படும் ரூ. 10 லட்சம் தொகையினை கொரோனா பாதிக்கப்பட்ட மக்களுக்காக தமிழக அரசு திரட்டி வரும் முதலமைச்சரின் கொரோனா பேரிடர் நிவாரண நிதிக்கு மகிழ்ச்சியோடு வழங்குகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

மாணவனாக இருந்த காலந்தொட்டு இன்று வரை தமிழ்நாட்டு மக்களின் நலனுக்கும், இந்தியநாட்டில் விடுதலைக்கும், உழைப்பாளி மக்கள் நலன் காத்திடவும் என்னால் முடிந்தளவு பணியாற்றியுள்ளேன், சுரண்டலற்ற பொதுவுடமை சமுதாயத்தை உருவாக்க நான் ஏற்றுக் கொண்ட மார்க்சிய கொள்கையின் அடிப்படையில் பயணம் செய்துள்ளேன். எனது இறுதி மூச்சு வரை இப்பணியை தொடர்ந்து நிறைவேற்றுவேன் என்றும் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

 

 

Translate »
error: Content is protected !!