கொலை வழக்கில் பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்ட குற்றவாளி கைது

சென்னை, டிபி சத்திரம் பகுதியில் தாயைக் கொன்ற வழக்கில் ஜாமினில் வெளிவந்து நீண்ட நாட்களாக தலைமறைவாக இருந்த மகனை பிடிவாரண்டு பேரில் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


கடந்த 26.3.2018 அன்று சென்னை டிபி சத்திரம் காவல் நிலைய எல்லையில் தனது தாய் கலாவதி (54)யை அவரது மகன் செனாய் நகரைச் சேர்ந்த நீலகண்டன் கொலை செய்தார். அது தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பின்பு ஜாமினில் வெளிவந்த நீலகண்டன் நீதிமன்ற வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாகி விட்டார். அவரை கைது செய்ய சென்னை மகிளா கோர்ட் பிடிவாரண்டு பிறப்பித்தது. அதன்பேரில் டிபி சத்திரம் போலீசார் நீலகண்டனை கைது செய்தனர். அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.

Translate »
error: Content is protected !!