கோரோனோ பற்றி பில் கேட்ஸ் கூறியது என்ன ?

மைக்ரோசாப்ட் இணை நிறுவனரும் , பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளையின் இணைத் தலைவருமான  பில் கேட்ஸ்   கூறியதாவது,  அடுத்த நான்கு முதல் ஆறு மாதங்கள் கொரோனா வைரஸ் தொற்றுநோயயின் மோசமான காலமாக இருக்கலாம் . இன்ஸ்டிடியூட் ஆப் ஹெல்த் மெட்ரிக்ஸ் அண்ட் எவல்யூஷன் 2 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் கொரோனா பாதிப்பால் மரணமடையலாம் என கணித்துள்ளது. முக கவசம் அணிவது போன்ற விதிகளை பின்பற்றினால்  அந்த இறப்புகளில் பெரும் சதவீதத்தை நாம் தவிர்க்க முடியும்.

 சமீபத்திய வாரங்களில், அமெரிக்காவில் அதிக அளவில் பாதிப்புகள், இறப்புகள் மற்றும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவது அதிகரித்து உள்ளது. இதைக் கையாள்வதில் அமெரிக்கா ஒரு சிறப்பான  வேலையைச் செய்யும் என்று நான் நினைத்தேன்.

 2015 ஆம் ஆண்டில் ஒரு தொற்று நோய்  குறித்து  நான் எச்சரித்தேன் அப்போது மரணங்கள் அதிகம் ஏற்படும் என கூறினேன்இந்த கொரோனா வைரஸ் அதைவிட அதிக ஆபத்தானது. ஆனால் என்னை ஆச்சரியப்படுத்திய விஷயம் அமெரிக்காவிலும் உலகெங்கிலும் உள்ள  நாடுகளில் பொருளாதார தாக்கம் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு நான் செய்த கணிப்புகளை விட மிக அதிகமாக உள்ளது. கொரோனா பாதிப்பால் அமெரிக்காவில் அதிக மரணங்கள்  நிகழ்ந்து உள்ளதுஎனது அறக்கட்டளை தடுப்பூசி குறித்த ஆராய்ச்சிகளுக்கு  நிறைய  நிதியளித்து வருகிறது

 நோயறிதல், சிகிச்சை மற்றும் தடுப்பூசிகளில், விஞ்ஞானம் எங்குள்ளது என்பதை நாம் அறிவோம். தொற்று நோய்க்கான நமது  நிபுணத்துவம், பொதுவாக வளரும் நாடுகளுடன் மட்டுமே தொடர்புடையது. மனிதகுலம் அனைவருக்கும் அமெரிக்கா உதவ வேண்டும், அதிபர் டொனால்ட் டிரம்ப்  மற்ற நாடுகளில் உள்ள மக்களுக்குச் செல்வதற்கு முன்பு தடுப்பூசி அமெரிக்கர்களுக்கு விநியோகிக்க முன்னுரிமை அளிக்கிறார்.

 அனைத்து தடுப்பூசிகளின் திறனையும் நாம் அதிகரிக்க வேண்டும். உற்பத்திக்கு  சில மாதங்களில் கூடுதல் ஒப்புதல் அளிக்கப்படும். அமெரிக்கா மற்ற நாடுகளின் வேலை பராமரிப்பிலிருந்து பயனடைந்துள்ளதுநாம் முன்னேற்றம் என்பதில் முற்றிலும் சுயநலமாக இருக்கக்கூடாது. முன்னாள் அமெரிக்க அதிபர் பில் கிளிண்டன், ஜார்ஜ் புஷ் மற்றும் பராக் ஒபாமா ஆகியோர் தடுப்பூசி குறித்த மக்களின் நம்பிக்கையை அதிகரிப்பதாக கூறியுள்ளதால் தடுப்பூசியை பகிரங்கமாக எடுத்துக்கொள்வதாக அவர் கூறினார்.

 

Translate »
error: Content is protected !!