கோவாக்சின் தடுப்பூசி போட்டுக்கொண்டார் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்

சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அமைச்சர் விஜயபாஸ்கர் கோவாக்சின் தடுப்பூசி செலுத்திக்கொண்டார்.

நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் திட்டத்தை பிரதமர் மோடி காணொலி காட்சி மூலமாக தொடங்கி வைத்தார். இந்தியாவின் சீரம் நிறுவனம் தயாரித்துள்ளகோவிஷீல்டுமற்றும் ஐதராபாத்தை சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்தகோவேக்சின்ஆகிய 2 தடுப்பூசிகளுக்கும் மத்திய அரசு அவசர கால பயன்பாட்டிற்கு அனுமதி அளித்துள்ளது

இந்த தடுப்பூசியை மத்திய அரசு அதிக அளவில் கொள்முதல் செய்து ஒவ்வொரு மாநிலங்களுக்கும் அனுப்பி உள்ளது. இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் அந்தந்த மாநில முதலமைச்சர்கள் தடுப்பூசி போடும் திட்டத்தை கடந்த 16 ஆம் தேதி தொடங்கி வைத்தனர்

தமிழகத்தில் 166 மையங்களில் கொரோனா தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட சுகாதாரப் பணியாளர்களுக்கு மட்டும் செலுத்தப்பட்டு வருகிறது. இதற்கிடையேகோவாக்சின்தடுப்பூசியின் நம்பகத்தன்மை குறித்து அரசியல் கட்சிகளும் சமூக ஆர்வலர்களும் விமர்சனங்களை முன்வைத்து வந்தனர்.

மேலும்பிற நாடுகளைப் போல பிரதமர்,முதல்வர், அமைச்சர்கள் தடுப்பூசி செலுத்திக்கொண்டு மக்களுக்கு நம்பிக்கையளிக்கக் கூடாது?’ என்ற கேள்வியையும் எழுப்பி வந்தனர். இந்த நிலையில் நான் கொரோனே தடுப்பூசி செலுத்திக்கொள்வேன் என்றும் ஒரு அமைச்சராக இல்லாமல் மருத்துவராக ஐஎம்ஏ உறுப்பினராக நான் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வேன் என்று கடந்த இரு தினங்களுக்கு முன்பு அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில், இன்று சென்னை அரசு ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் உள்ள கொரோனா தடுப்பூசி மையத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கோவாக்சின் தடுப்பூசி செலுத்திக்கொண்டார். ”சுகாதார பணியாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் நோக்கில் தடுப்பூசி போட்டுக்கொண்டதாக அமைச்சர் தெரிவித்தார்.

 

Translate »
error: Content is protected !!