கோவாவிலிருந்து கடத்திவந்து தோட்டத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 3146 மதுபாட்டில்கள். கேரளா மாநிலத்தில் கொரோனா பொது முடக்கத்தில் அதிக விலைக்கு விற்பனைக்கா பதுக்கி வைப்பு.
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள புள்ளகாபட்டி பகுதியில் ரவி என்பவர் தோட்டத்தில் மது பாட்டில்களை பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட காவல்துறைக்கு வந்த ரகசிய தகவலின் அடிப்படையில்,
தேவதானப்பட்டி காவல்துறையினர் நேரில் சென்று ரவி என்பவரின் தோட்டத்தில் உள்ள சீமை புற்களின் நடுவே 750ML அளவு கொண்ட மதுபாட்டில்கள் குவியல் குவியலாக குவிக்கப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து தேனி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பிரவீன் உமேஷ் டோங்ரே உத்தரவின் பேரில் பெரியகுளம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் முத்துக்குமார் தலைமையில் தோட்டத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த மது பாட்டில்களை கைப்பற்றி தேவதானபட்டி காவல்நிலையத்தில் சேர்த்தனர்.
இதில் மொத்தம் 12 லடசம் ரூபாய் மதிப்பிலான 3146 மதுபாட்டிகள் இருப்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து தோட்ட உரிமையாளர் ரவியை கைது செய்து விசாரணை செய்த போது கோவாவில் இருந்து லாரி மூலாம மது பட்டிகளை கடத்தி வந்ததாகவும் கேரள மாநிலம் எர்ணாகுளத்தை சேர்ந்த சுரேந்தர் என்பவருடன் சேர்ந்து கேரளாவில் பொது முடக்க காலத்தில் விற்பனைக்கு கொண்டு செல்ல இருந்ததாகவும் பொது முடக்கத்தில் கூடுதல் விலைக்கு விற்றால் 50 லட்சம் ரூபாய்க்கு மேல் விற்பனை செய்ய இருந்ததாக விசாரணையில் தெரியவந்தது.
இதனை தொடர்ந்து தோட்ட உரியமையாளர் ரவியை கைது செய்து நீதி மன்றத்தில் ஒப்படைத்து சிறையில் அடைத்தனர். மேலும் மதுபாட்டிலகள் கோவாவில் இருந்து வாங்கி வந்த கேரளாவை சேர்ந்த சுரேந்தரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.