சட்டசபை தேர்தல் குறித்து பா.ம.க நிறுவனர் ராமதாஸ் உடன் அமைச்சர்கள் பி.தங்கமணி, எஸ்.பி.வேலுமணி ஆகியோர் இன்று பேச்சுவார்த்தை

விழுப்புரம்,

சட்டசபை தேர்தலுக்கான கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்து பா... நிறுவனர் ராமதாஸ் உடன் அமைச்சர்கள் பி.தங்கமணி, எஸ்.பி.வேலுமணி ஆகியோர் இன்று பேச்சுவார்த்தை நடத்தினர்.

தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டசபை தேர்தல் வரவுள்ளது. இதற்காக அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் களப்பணிகளில் ஈடுபட்டுள்ளனர். தேர்தல் பிரச்சாரமும் சூடு பிடிக்க துவங்கியுள்ளது. கடந்த சட்டசபை தேர்தலில் தனித்து போட்டியிட்ட பாமக, 2019 ம் ஆண்டு நடந்த பார்லிமெண்ட் தேர்தலில் அண்ணா திமுக உடன் கூட்டணி சேர்ந்தது.

இந்நிலையில், தமிழகத்தில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 20 சதவீதம் தனி இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என அண்ணா திமுக அரசை தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. பா.. தொடர்ந்து பல்வேறு கட்ட போராட்டங்களையும் நடத்தியது. இந்நிலையில், விழுப்புரத்தில் உள்ள தைலாபுரம் தோட்டத்தில் நண்பகல் 12:30 மணிக்கு பா.. நிறுவனர் டாக்டர் ராமதாசை அமைச்சர்கள் பி.தங்கமணி, எஸ்.பி.வேலுமணி ஆகியோர் சந்தித்து பேசினர்.

அப்போது பா... தரப்பில் இளைஞர் அணி செயலாளர் அன்புமணி ராமதாஸ், கட்சி தலைவர் ஜி.கே.மணி ஆகியோர் உடன் இருந்தனர். இந்த சந்திப்பில் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்தும் வன்னியர்களுக்கு 20 சதவீத தனி இட ஒதுக்கீடு குறித்தும் பேசப்பட்டதாக கூறப்படுகிறது.

 

Translate »
error: Content is protected !!