தமிழ்நாட்டிலேயே சிசு சிகிச்சை பிரிவில் சிறப்பாக செயல்பட்டதற்காக தமிழக அரசால் விருது வழங்கப்பட்டுள்ளது. அதற்கு காரணமான மருத்துவமனை மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் ஊழியர்களை மருத்துவமனை டீன் வனிதா பாராட்டினார். அதை தொடர்ந்து திருச்சி அரசு மருத்துவமனையில் இன்று மருத்துவமனை முதல்வர் வனிதா பத்திரிகையாளர்களை சந்தித்தார்
அதில், தமிழகத்தின் மத்திய பகுதியான திருச்சி மாவட்டத்தில் தொடர்ந்து நல்ல முறையில் சிகிச்சை அளித்து வந்து கொண்டிருக்கும் திருச்சி அரசு மருத்துவமனையில் பல்வேறு சாதனைகளை செவிலியர்கள் மற்றும் மருத்துவர்கள் நிகழ்த்தி வருகின்றனர் அதைத் தொடர்ந்து இந்த ஆண்டு குழந்தைகள் சிகிச்சை பிரிவில் சுமார் 10,000 குழந்தைகள் நல்ல முறையில் பிறந்துள்ளது அதைத்தொடர்ந்து அவர்களுக்கு நல்ல முறையில் சிகிச்சை வழங்கியதாகவும் உயிரை காப்பாற்றியதாகவும் மற்ற மாவட்டங்களை விட சிறப்பான முறையில் சிகிச்சை அளித்ததன் மூலமாக தமிழக முதலமைச்சர் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்களால் திருச்சி அரசு தலைமை மருத்துவமனைக்கு விருது வழங்கப்பட்டது.
பிறந்த குழந்தைகளில் 1000 குழந்தைகள் வென்டிலேட்டர் மூலம் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு உயிர்களை காப்பாற்றி உள்ளோம். குறிப்பாக உயிரிழக்கும் தருவாயில் இருந்த 150 குழந்தைகளின் உயிர்களை காப்பாற்றி உள்ளோம்.
மேலும் தற்போது கொரோனா காலகட்டத்திலும் திருச்சி அரசு மருத்துவமனையில் நடைப்பெற்ற பிரசவத்தில் 325 கொரோனா உறுதி செய்யப்பட்ட தாய்மார்களுக்கு பிரசவம் பார்க்கப்பட்டது.அவர்களில் 10 குழந்தைகளுக்கு மட்டுமே கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருந்தது அவர்களுக்கும் சிகிச்சை அளித்து உயிரை காப்பாற்றினோம். அதைத்தொடர்ந்து திருச்சி மாவட்டத்தை பொறுத்த மட்டில் கொரோனா பாதிப்பு போது மூன்று இலக்க எண்ணில் இருந்து ஒற்றை இலக்க எண்ணிற்கு கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். அதிகமான குழந்தை திருமணத்தை கட்டுப்படுத்த வேண்டும் ஏனென்றால் குழந்தை பெறுவதற்கு சரியான வயது21 முதல் 24 தான் அதற்கு முன்னதாக யாரும் அவசரப்பட வேண்டாம் அது பெண்களின் உடல் நலத்திற்கு ஆபத்தை விளைவிக்கும் என்று தெரிவித்தார்.