சென்னை அம்பத்துாரில் காணாமல் போன 14 செல்போன்கள் மீட்பு

சென்னை அம்பத்துாரில் சைபர் குற்றப்பிரிவு தனிப்படையினர் மூலம் காணாமல் மற்றும் திருடு போன 14 செல்போன்கள் மீட்க்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. அது தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டனர்.

அம்பத்தூர் துணைக்கமிஷனர் தீபாசத்யன்

சென்னை அம்பத்தூர் துணைக்கமிஷனர் தீபாசத்யன் மேற்பார்வையில் எஸ்ஆர்எம்சி உதவிக்கமிஷனர் சம்பத் தலைமையில், குன்றத்தூர், மாங்காடு மற்றும் எஸ்ஆர்எம்சி காவல் நிலையங்களின் உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் அடங்கிய தனிப்படையினர் தீவிர காணாமல் போன செல்போன்கள் தொடர்பாக தீவிர விசாரணை நடத்தினர். செல்போன்களின் ஐஎம்இஐ எண்ணை வைத்து திருட்டு செல்போன்களை விற்பனை செய்த சென்னை காட்டுப்பாக்கத்தைச் சேர்ந்த கண்ணன் (27) என்பவரை கடந்த 24ம் தேதியன்று கைது செய்தனர்.

அவரிடம் இருந்து 1 செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் எஸ்ஆர்எம்சி காவல் நிலைய எல்லையில் செல்போன் பறிப்பு மற்றும் திருட்டில் ஈடுபட்ட கொள்ளையன் ஐயப்பன்தாங்கலைச் சேர்ந்த தாமோதரன் (19) நேற்று கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து விலையுயர்ந்த 6 செல்போன்கள் மற்றும் ஒரு இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் சைபர் குற்றப்பிரிவின் ஐஎம்இஐ தகவல் திரட்டும் குழுவினரால் அம்பத்தூர் காவல் மாவட்டத்தில் காணாமல் போன 7 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த வகையில் கடந்த வாரத்தில் ரூ. 2 லட்சம் மதிப்புள்ள மொத்தம் 14 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

திறமையாக செயல்பட்டு செல்போன்களை மீட்ட அம்பத்துார் சைபர்கிரைம் பிரிவு தனிப்படை மற்றும் அம்பத்துார் துணைக்கமிஷனர் தீபாசத்யன் ஆகியோரை கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் வெகுவாக பாராட்டினார்.

Translate »
error: Content is protected !!