சென்னை நகரில் காணாமல் போன 4 குழந்தைகள் மீட்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைப்பு

சென்னை நகரில் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவின் பேரில் காணாமல் போன குழந்தைகளை கண்டுபிடிக்க உத்தரவிடப்பட்டது. அதன்பேரில் சென்னை நகர பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான குற்றத்தடுப்பு பிரிவு துணைக்கமிஷனர் ஜெயலட்சுமி மேற்பார்வையில் குழந்தை கடத்தல் தடுப்புப்பிரிவு, சிறுவர் நலக்காவல் பிரிவில் உள்ள 2 பிரிவுகளிலும் தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடந்தது.

அதனையடுத்து சென்னை ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த காணாமல் போன குழந்தை திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளியில் கண்டுபிடிக்கப்பட்டு அவரது உறவினரிடம் பத்திரமாக அனுப்பிவைக்கப்பட்டது. ஐஸ் அவுஸ் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கில் தேடப்பட்டு வந்த காணாமல் போன குழந்தை சோழிங்கநல்லூரில் கண்டுபிடிக்கப்பட்டு அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

மேலும் கொடுங்கையூரில் காணாமல் போன குழந்தை ஓட்டேரியில் கண்டுபிடிக்கப்பட்டு அவரது பெற்றோரின் எழுத்து மூலமான ஒப்புதல் பெற்று போலீசார் பத்திரமாக அனுப்பிவைக்கப்பட்டது. மேலும் ஓட்டேரி காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கில் தேடப்பட்டு வந்த காணாமல் போன குழந்தை மாதவரத்தில் கண்டுபிடிக்கப்பட்டு அவரது பெற்றோரின் எழுத்து மூலமான ஒப்புதல் பெற்று அனுப்பிவைக்கப்பட்டது. மேலும் மேற்கண்ட காணாமல் போன குழந்தைகள் கண்டுபிடிக்கப்பட்ட தகவலை மேற்படி காவல்நிலையத்திற்கு தெரியப்படுத்தி அது சம்பந்தப்பட்ட வழக்கு முடித்துவைக்கப்பட்டது.

Translate »
error: Content is protected !!