சென்னை பாரிமுனை, மண்ணடியில் ரூ. 60 லட்சம் வெளிநாட்டு கரன்சியை போலீசார் வாகன சோதனை நடத்தி பறிமுதல் செய்துள்ளனர்.
சென்னை, மண்ணடி, ராஜாஜி சாலையில் வடசென்னை இணைக்கமிஷனர் பாலகிருஷ்ணனின் தனிப்படை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஆட்டோ ஒன்றை மடக்கி நிறுத்தி சோதனை செய்தனர்.
ஆட்டோவில் இருந்த இருவர் வைத்திருந்த பையை சந்தேகத்தின் பேரில்
சோதனையிட்டனர். அதற்குள் ரூ. 60 லட்சம் மதிப்பிலான குவைத் தினார், அமெரிக்க டாலர் மற்றும் ஓமன் நாட்டு கரன்சிகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதற்குறிய சரியான ஆவணங்கள் இல்லாததால் பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இருவரையும் வடக்கு கடற்கரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தியதில் அவர்கள் கேரளாவைச் சேர்ந்த முகமது அர்ஷத், முகமது
ஜியாத் என்பது தெரியவந்தது. அந்த பணத்தை அமலாக்கத்துறையிடம் போலீசார் ஒப்படைத்தனர். அமலாக்கத்துறை அதிகாரிகள் 2 பேரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.